வெட்டிய மரத்தை வேறு இடத்தில வைக்க வேண்டும்!! - மரங்களின் நலம் விரும்பி வேண்டுகோள்!!

     -MMH 

பொள்ளாச்சி சாலையில் விரிவாக்க பணி காரணமாக சாலையோர மரங்களை வெட்டி வருகின்றனர்.இதனால் மரங்களின் நல விரும்பிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.இந்நிலையில் பொள்ளாச்சி பிங்கி லைஃப் ஸ்டைல் என்ற ஜவுளிக்கடையின் எதிர்ப்புறம் வெட்டப்பட்ட மரம் தற்போது துளிர்விட்டு உள்ளது.

இதைக்கண்ட மரங்களின் நலம் விரும்பி ஒருவர் இந்த துளிர்விட்ட மரத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடியுமா என்று  மரங்களின் பாதுகாவலன் என்று போற்றப்படும்  ஆனைமலை ஆலம் விழுது குழுவினருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலை சேகரித்து கொண்ட ஆலம் விழுது குழுவினர் இடம் தேர்வு செய்து நிச்சயம் முயற்சி செய்வோம் என்று தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் இப்பணியை மேற்கொள்ள செலவு அதிகம் ஆகும் என்பதால் காலதாமதம் ஆவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

முயற்சி திருவினை ஆகும் என்ற சிந்தனையோடு,

நாளைய வரலாறு செய்திக்காக,

-சுரேஷ்குமார்,கோவை தெற்கு.

Comments