நகராட்சி நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!! - பணிகள் துடங்கி விட்டது!!
பொள்ளாச்சி நகராட்சி 20.11.2020 அன்று 100 ஆண்டுகளை கடந்து நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டிய நேரத்தில் நகராட்சி நிர்வாகம் ஏன் மறந்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து பொள்ளாச்சி நகராட்சியின் நூற்றாண்டு விழாவை மறந்து விட்டார்களா..? என்ற தலைப்பில் கடந்த 20ம் தேதி நம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் பொள்ளாச்சி நகராட்சி நூற்றாண்டு விழாவை நாளை 26.11.2020 கொண்டாட தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நகராட்சி அலுவலகம் சுற்றுச் சுவர்களில் பொள்ளாச்சியை பெருமையைக் குறிக்கும் வகையில் வண்ண ஓவியங்களை தீட்டி வருகின்றனர். மேலும் சீரியல் லைட்டுகள் கொண்டு சுற்றுச் சுவர்களில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதைக் கண்ட பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.
Comments