சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் எப்படி ஆவி பிடிக்க வேண்டும் ❓

 -MMH 

     சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு நிரந்தரமாக சரி செய்யக் கூடிய அற்புதமான பாட்டி வைத்தியத்தை தான் பார்க்கப் போகின்றோம்.

இப்பொழுது நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு செடி தும்பைச் செடி. இதை வேலி ஓரங்களில் அதிகமாக பார்த்திருப்பீர்கள். வெள்ளைநிற பூக்களுடன் இருக்கும். இதனுடைய இலை, பூ, வேர் ஆகியவை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. இதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதே வாருங்கள் பார்க்கலாம்.

1. நாம் முதலில் இந்த தும்பை செடியின் இலையை வைத்து ஆவி பிடிக்க போகின்றோம். ஆவி பிடிக்கும்பொழுது தலையில் கோர்த்திருக்கும் நீர் வெளியேறி சைனஸ் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

2. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

3. ஒரு பிடி அளவு தும்பை செடியின் இலையை நன்கு கழுவிவிட்டு தண்ணீரில் போடவும் .

4. பிறகு ஒரு ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளை போடவும்.

5. தண்ணீர் நன்கு கொதிக்க வேண்டும். மேலே ஒரு தட்டை வைத்து மூடி நன்கு கொதிக்கவிடவும்.

6. இப்பொழுது ஒரு கனமான பெட்சீட்டை எடுத்து போர்த்தி, இந்த தண்ணீரை வைத்து ஆவி பிடிக்க வேண்டும். நன்றாக ஆவி பிடிக்க வேண்டும். நன்றாக மூச்சை இழுத்து மேலும்கீழும் படும்படியாக நன்றாக ஆவி பிடிக்க வேண்டும். இது ஒரு முறையாகும்.

7. பிறகு தும்பை பூக்களை மட்டும் எடுத்துக் கொண்டு அடுப்பில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் காய வைத்து இதில் இந்தத் தும்பைப் பூவை போடவும், பூக்கள் நன்கு பொரித்து வெடிக்க வேண்டும்.

8. இந்த எண்ணெய் உங்கள் தலைக்கு குளிக்கும் பொழுது நன்றாக தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.

9. வாரம் இருமுறை இப்படி செய்யும் பொழுது உங்களது சைனஸ் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும்.

-ஸ்டார் வெங்கட்.

Comments