பழுதடைந்த மின்கம்பம் கண்டுகொள்ளுமா ..மின்சார வாரியம்!!

   -MMH

     கோவை மாவட்டம் போத்தனூர் குமரன் நகர் அஸ்லாம் வீதியில், மின் விளக்கு கம்பம் பழுதடைந்த நிலையில் நீண்ட நாட்களாக இருப்பதாக அங்கு வசிக்கும் மக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

மழை காலங்களாக இருப்பதால் கம்பத்தில் விரிசல் அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர். விபத்து நேர்வதற்கு முன்பு அந்த மின்கம்பத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சரி செய்து தருமாறு அங்கு வசிக்கும் மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஈஷா,கோவை.


Comments