கோவையில் பரபரப்பு!! கோழி மற்றும் நாய்களுக்கு விஷம் வைத்துக் கொலை..!

-MMH

கோவை கவுண்டம்பாளையம் அருகே முன்விரோதத்தில் நாய் மற்றும் கோழிகளுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை கவுண்டம்பாளையம் அருகே இடையர்பாளையம், பூம்புகார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா இவரின் மகன் அழகு (43).

இவர் துடியலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கோவில் மேடு பகுதியில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆடு மாடு நாய் ஆகியவற்றை வளர்த்து வருகிறேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு என்னை சிலர் மிரட்டினர்.

இந்த நிலையில், நான் வளர்த்து வரும் நாய், கோழிகளுக்கு யாரோ விஷம் வைத்துக் கொன்று விட்டனர். எனவே, விலங்குகளுக்கு விஷம் வைத்துக் கொன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.        

-சீனி போத்தனூர்.

Comments