சிங்கம்புணர வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வு நடத்திய ஆட்சியர் !!

 

 -MMH

    சிங்கம்புணரி: நவ-20 ; சிவகங்கை மாவட்ட ஆட்சியர், சிங்கம்புணர வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வு.

சிவகங்கை புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள மதுசூதனன் ரெட்டி சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். அந்த வளாகத்தில் உள்ள யூனியன் அலுவலகம், வேளாண் அலுவலகம், தோட்டகலை அலுவலகம் மற்றுமுள்ள அலுவலகங்களில் ஆய்வு நடத்தினார். வேளாண் அலுவலகம், தோட்டகலைத்துறை அதிகாரிகளிடம் சிங்கம்புணரி பகுதியில் கார்த்திகை மாத மானாவாரி சாகுபடி பற்றி விபரம் கேட்டறிந்தார். சிங்கம்புணரி பகுதியில் உள்ள அதிகமான தென்னைமரங்கள் பற்றி அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் கூறினர். 

நிகழ்வில் அவர் யூனியன் அலுவலகத்தின் முன்புறம் மகிழம்பூ மரக்கன்று நட்டார். அந்த மரத்தின் நன்மைகள் என்னென்ன என மகிழம்பூ மரத்தின் நன்மை பற்றி கேட்டறிந்தார்.

-ஃபாரூக்,சிவகங்கை.

Comments