நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் இறந்து கிடந்ததால் தஞ்சையில் பரபரப்பு!!

  -MMH

     நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் இறந்து கிடந்ததால் தஞ்சையில் பரபரப்பு.

      தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகில் உள்ள ஆண்டாள் ஏரிக்கு  வெளிநாட்டுப் பறவைகள்  ஆண்டுதோறும் வருவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டும் வழக்கம்போல வெளிநாட்டு இனப் பறவைகள் நூற்றுக்கும் மேற்பட்டவை  ஆண்டாள் ஏரிக்கு  வந்ததுள்ளது.  அப்போது அந்த  பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் வெளிநாட்டு பறவைகளுக்கு விஷம் வைத்துள்ளனர் இதனால் அந்தப் பறவைகள் அருகில் உள்ள வயல் வெளிகளில் இறந்து கிடந்ததால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள்  அதிர்ச்சி அடைந்தனர். இது போன்று பறவை இனத்தை வேட்டையாடி வருவது மனித குலத்திற்கே பேராபத்தாக முடியும் என்று அந்தப் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். பறவையினங்கள் தான் காடு வளர்ப்பிற்கு மிகவும் முக்கியமாக இருக்கின்றன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும்.

வனத்துறை அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு மிகவும் கடுமையாக வேட்டையாடும் நபர்களை தண்டிக்க வேண்டும்  என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது,  பறவையினங்கள் மிகவும் புத்திக் கூர்மை உடையவை.  அவை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு இனப்பெருக்கத்திற்காகவும்  அதற்கு ஏற்ற தட்பவெப்ப சூழ்நிலைக்காகவும்  இடம் பெயர்வது வழக்கம். பறவை இனங்களை வேட்டையாடுவதும் அவற்றிற்கு இடையூறு விளைவிப்பதும்  வன்மையாக கண்டிக்கத்தக்க செயல்.  இத்தகைய பாதக செயலை செய்யும் மர்மநபர்கள் தண்டிக்கப் படுவார்களா எதிர்பார்ப்புடன் இயற்கை ஆர்வலர்கள். 

-இராஜசேகரன்,தஞ்சாவூர்.

Comments