மது அருந்த பணம் கேட்டு ஒருவர் அடித்து கொலை கோவையில் அதிர்ச்சி!!

-MMH

கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள  டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு வந்த விக்னேஷ் என்ற  இளைஞர் வழிப்பறி கும்பலால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

தேனியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் விக்னேஷ். இவர்  கோவை விமான நிலையம் அருகேயுள்ள பூங்கா நகர் பகுதியில் தங்கியிருந்து, தனது உறவினரின் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில்நேற்றிரவு விமான நிலையத்திற்கு பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையில் தனது நண்பர் சுஷித் என்பவருடன் குடித்துவிட்டு திரும்பியுள்ளார். 

அப்போது 4 பேர் கொண்ட கும்பல் விக்னேஷை தடுத்து நிறுத்தி குடிக்க பணம் கேட்டுள்ளனர். சுஷித் தன்னிடம் இருந்த செல்போனை  கொடுத்த நிலையில்,  விக்னேஷ் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ஒருவன் விக்னேஷின் கழுத்தில் கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர். 

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த விக்னேஷ் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

-சீனி போத்தனூர்.    

Comments