பொள்ளாச்சி கார்த்திகை தீபம் ரெடி நீங்க ரெடியா..!!

  -MMH

     திருகார்த்திகை திருநாளுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பொள்ளச்சியை அடுத்துள்ள R.பொன்னபுரம்,சூலக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள மண்பானை வியாபரிகள் தற்போது விறுவிறுப்பாக கார்த்திகை தீப திருநாளுக்காக அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து மண்பானை வியாபரிகள் கூறுகையில், சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா காரணமாக அகல் விளக்குக்கான ஆர்டர் குறைந்துள்ளதால் அதனை நம்பி உள்ள எங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. இருப்பினும் இந்த அகல் விளக்குகள் உங்கள் இல்லங்களில் ஒளிர காத்து இருக்கின்ற. இந்த அகல் விளக்கு வெளிச்சத்தில் நாமும் நம் குடும்பமும் ஒளிரட்டும் என்று கூறியதோடு பொதுமக்கள் கார்த்திகை தீப திருநாள் அன்று மெழுகு விளக்குகளை தவிர்த்து இந்த அகல் விளக்களை அதிக அளவில் பயன்படுத்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளச்சி கிழக்கு.

Comments