பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் குவியல்!!

     -MMH


வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே, மாந்தபுரம் கீழ்பவானி பாசன வாய்க்கால் பிளாஸ்டிக் மற்றும் கோழி கழிவால் சூழ்ந்துள்ளது.மாந்தபுரம், நடுப்பாளையம், மேட்டுப்பாளையம், மங்கலப்பட்டி, கருந்தேவிக்கவுண்டன்புதுார் உட்பட்ட கிராம பகுதிகளில், 1,300 ஏக்கர் பரப்பில் நெல் நாற்று நடவு செய்யப்பட்டுள்ளது.கடைமடையில் தண்ணீர் குறைவாக வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


வாய்க்காலில், தண்ணீர்விட்ட நாள் முதல், ஒரு முறை, பிளாஸ்டிக் கழிவுகள், பொக்லைன் மூலம் அகற்றப்பட்டன. இருப்பினும், தற்போது, டன் கணக்கில், பிளாஸ்டிக் மற்றும் கோழி கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.இதனால், சுகாதாரகேடு ஏற்படுவதோடு, பாசனத்துக்காக தண்ணீர் பாய்ச்சும்போது, தண்ணீரோடு கலந்து கண்ணாடி பாட்டில்கள் வாய்க்காலில் வருகின்றன.


தண்ணீரில், துர்நாற்றம் வீசுவதாக கடைமடை விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.அவர்கள் கூறியதாவது;பருவமழை தீவிரமடையும் நிலையில், இப்பிரச்னைக்கு பொதுப்பணி துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில், மழை பெய்தும் விவசாயிகளின் தண்ணீர் தேவை பூர்த்தியாத சூழலே தொடரும். இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.


நாளையவரலாறு செய்திக்காக, 


-முஹம்மதுஹனீப்.


Comments