போத்தனூர் கோணவாய்க்கால் பாளையம் பிரதான சாலையில் அதிக அளவில் மழைநீர் சேர்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி!!

     -MMH


     போத்தனூர் கோணவாய்க்கால் பாளையம் பிரதான சாலையில் அதிக அளவில் மழைநீர் சேர்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதி!!


கோயமுத்தூர் போத்தனூர் கோண வாய்க்கால் பாளையம் பிரதான சாலையில் மழைநீர் தேக்கத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் பெய்த மழையினால் சாலையோரம் தண்ணீர் அதிகளவில் தேங்கிய நிலையில் கிடப்பதாகவும் அந்தப் பகுதி மக்களும் முதியவர்களும் வாகன ஓட்டிகளும் கீழே விழும் அபாயமும் உள்ளது.இதை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் அந்த தண்ணீரை அப்புறப்படுத்துமாறு அந்த பகுதிமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


-ஈஷா,கோவை.


Comments