மொபைல் எண்ணை மிக சுலபமாக ஆதாரில் அப்டேட் செய்ய முடியும்!!

     -MMH


     ஆதார் விவகாரங்களைக் கையாளும் UIDAI அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று மிகச் சுலபமாக மொபைல் எண்ணை அப்டேட் செய்ய முடியும்.


https://ask.uidai.gov.in/ என்ற முகவரியில் சென்று மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டைப் பதிவு செய்து லாக் இன் செய்ய வேண்டும். ‘Send OTP’என்பதை கிளிக் செய்தால் உங்களது மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.


ஓடிபி எண்ணைப் பதிவிட்டு ‘submit OTP and process’ என்பதை கிளிக் செய்யவும். அடுத்து ஒரு ஸ்கிரீன் ஓப்பன் ஆகும். அதில் ’update Aadhar’ என்பதை கிளிக் செய்யவும்.


இப்போது வரும் திரையில் ஆதார் எண், முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்கள் வரும். நீங்கள் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என்பதால் உங்களது விவரங்களை அதில் பதிவு செய்து ‘what do you want to update’ என்ற பிரிவின் கீழ் ‘Mobile Number’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.


'proceed' என்பதை கிளிக் செய்தால் அடுத்த திரையில் உங்களது மொபைல் எண்ணையும் கேப்ட்சா குறியீட்டையும் பதிவிட வேண்டியிருக்கும்.


அவற்றைப் பூர்த்தி செய்து 'send OTP' என்பதை கிளிக் செய்தால் ஓடிபி வரும். அதை பதிவு செய்து 'save and proceed' கொடுத்து விவரங்களைச் சரிபார்த்து 'submit' கொடுக்கவும்.


அதன் பின்னர் உங்களது கோரிக்கை வெற்றியடைந்ததாக மெசேஜ் வரும். அதன் பின்னர் ‘Book Appointment’ என்பதை கிளிக் செய்து அப்பாயின்மெண்ட் புக் செய்ய வேண்டும். இதன் பின்னரே நீங்கள் ஆதார் சேவை மையத்துக்குச் சென்று மொபைல் எண் அப்டேட் செய்ய முடியும்.


‘Book Appointment’ என்பதில் நீங்கள் ஆதார் சேவை மையத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். மாநிலம், பின் கோடு போன்றவற்றின் மூலம் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். அதில் ஏதேனும் ஒரு மையத்தை தேர்ந்தெடுத்து ’get details’ என்பதை கிளிக் செய்யவும்.


இப்போது பின் கோடு விவரங்களை வைத்து உங்களுக்கு அருகிலுள்ள மையங்களின் விவரங்கள் உங்களுக்கு காண்பிக்கப்படும். அதில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ‘Book Appointment’ என்பதை கிளிக் செய்யவும். அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பின்னர் ’confirm' கொடுக்கவும். அதன் பின்னர் உங்களுக்கு ஒரு பிடிஎஃப் விண்ணப்பம் வரும். அதை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.பின்னர் ஆதார் சேவை மையத்துக்குச் சென்று மொபைல் எண்ணை அப்டேட் செய்ய முடியும்.


-ஸ்டார் வெங்கட்.


Comments