WhatsApp OTP மோசடி! வாட்ஸ்அப் ஓடிபி மோசடி என்றால் என்ன....!!

 

-MMH
வேணும்னே ஒரு மெசேஜ் வரும்!

அதை பார்வேட் பண்ணிடாதீங்க!

ஸ்கேமர்கள் மற்றும் ஹேக்கர்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

இதோ எளிய வழிகள்.

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான வாட்ஸ்அப் பயனர்கள் உள்ளனர்.

குறிப்பாக COVID-19 தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்-டவுனுக்கு பின்,

வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது.

இது மோசடி செய்பவர்களும் ஹேக்கர்களும், பயனர்களை மோசடி செய்வதற்கும்

அவர்களின் தனிப்பட்ட தரவைத் திருடுவதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாகவும் அமைந்தது.

அப்படியாக வாட்ஸ்அப்பில் கிளம்பிய ஒரு லேட்டஸ்ட் பிரச்சனை தான் - வாட்ஸ்அப் OTP மோசடி.

முக்கியமான தரவைத் திருட, ஸ்கேமர்கள் பயன்படுத்திய பழைய தந்திரம் இது.

நீங்கள் குறிவைக்கப்பட்டிருந்தால், மோசடி செய்பவர்கள் முதலில் தெரியாத எண்ணிலிருந்து ஒரு வாட்ஸ்அப் செய்தியை அனுப்பலாம், அவர்கள் OTP அடங்கிய டெக்ஸ்ட் மெசேஜை தவறாக அனுப்பியதாகக் கூறி அதை அவர்களுக்கு திருப்பி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

இது உங்களுக்கு நேர்ந்தால், உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டிற்கான அணுகலை இது வழங்கும் என்பதால் OTP ஐ யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீங்கள் ஹேக்கருக்கு OTP ஐ வழங்கினால், நீங்கள் உங்கள் சொந்த வாட்ஸ்அப் அக்கவுண்டில் இருந்து வெளியேற்றப்படலாம். மேலும் உங்கள் சாட்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.

இந்த வாட்ஸ்அப் ஓடிபி மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

இத்தகைய மோசடிகளிலிருந்து விலகி இருக்க முதலில் Two-step authentication இயக்குவதை உறுதிசெய்யவும். இந்த விருப்பத்தை இயக்குவது எப்படி?

வழிமுறை1: வாட்ஸ்அப் பயன்பாட்டைத் திறந்து, மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்க. நினைவூட்டும் வண்ணம் சில ஆண்டுகளுக்கு முன்பு மெசேஜிங் தளத்திற்கு Two-step authentication அறிமுகப்படுத்தப்பட்டது.

வழிமுறை2: பின்னர் அக்கவுண்ட் விருப்பத்தைத் தொடர்ந்து செட்டிங்ஸ் விருப்பத்தை கிளிக் செய்யவும்.

வழிமுறை3: பின்னர் Two-step authentication-ஐ கிளிக் செய்யவும், பின்னர் அதை எனேபிள் செய்யவும்.

வழிமுறை4: குறிப்பிட்ட விருப்பத்தை இயக்கிய பிறகு,

நீங்கள் ஆறு இலக்க ரகசிய பின் எண்ணை உள்ளிட வேண்டும்,

அது உங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும்.

வழிமுறை5: வாட்ஸ்அப் இரண்டு முறை PIN-ஐ உள்ளிடுமாறு கேட்கும்,

அதைத் தொடர்ந்து உங்கள் மின்னஞ்சல் முகவரியை கேட்கும்.

வழிமுறை6: மின்னஞ்சல் முகவரியை உறுதிசெய்த பிறகு,

உங்கள் Two-step authentication செயல்படுத்தப்படும்.

வழிமுறை7: தேவைப்பட்டால், இதே வழிமுறைகளை பின்பற்றி,

எந்த நேரத்திலும் PIN-ஐ முடக்கலாம் அல்லது மாற்றலாம்.

Two-step authentication விருப்பம் இயக்கப்பட்டதும்,

பாதுகாப்பு நோக்கங்களுக்காக முறையான இடைவெளியில் கடவுச்சொல்லை உள்ளிட வாட்ஸ்அப் கேட்கும்.

-பாரூக் சிவகங்கை.

Comments