மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கிருமிநாசினி!!

     -MMH


     பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீபாவளி பண்டிகை நெருங்குவதை ஒட்டி மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கொரோனா  நோய் தொற்று  பரவல் குறித்த மக்கள் அச்சமின்றி வெளியில் சுற்றித் திரிகின்றனர். பொது இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் கிருமிநாசினி பயன்படுத்தாமலும் இருந்து வருகின்றனர்.இதைக் கருத்தில் கொண்ட மக்கள் நீதி மையத்தைச் சேர்ந்த ஆனைமலை ஒன்றிய செயலாளர் கமல் பாவா மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து அம்பராம்பாளையம் பகுதியில் மக்கள் அதிகம்  கூடும் இடங்களான கனரா வங்கி, கிருஷ்ணா பேக்கரி, ஆல்வா மருத்துவமனை, உள்ளிட்ட முக்கிய இடங்களில் மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் ஸ்டாண்ட் உடன் கூடிய கிருமிநாசினி துவக்கி வைத்தார் மேலும் பொதுமக்களிடம் நோய்த்தொற்று பரவலை கட்டுபடுத்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.நாளைய வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.


Comments