காற்றில் பறந்தது முதல்வரின் உத்தரவு!!!

     -MMH 


     வால்பாறை:முதல்வர் அறிவித்த கூலி உயர்வு, ஓராண்டுக்கு மேலாகியும் வழங்காததால், டான்டீ தொழிலாளர்கள் விரக்தியடைந்துள்ளனர். வால்பாறையில், தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் (டான்டீ) நிறுவனத்துக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட்கள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், கோவையில் நடந்த விழாவில், தமிழக முதல்வர் பழனிசாமி பேசும்போது, "டான்டீ தொழிலாளர்களுக்கு தற்போது பெறும் ஊதியத்துடன், 12.50 ரூபாய் தினக்கூலி உயர்த்தி வழங்கப்படும். அதே போன்று, தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலி, ஐந்து ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்,"என்றார்.


ஆனால், முதல்வர் அறிவித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இது வரை டான்டீ தொழிலாளர்களுக்கும், தனியார் தோட்ட தொழிலாளர்களுக்கும் கூலி உயர்வு வழங்கவில்லை. முதல்வர் உத்தரவை காற்றில் பறக்க விட்டதால், தொழிலாளர்கள் விரக்தியடைந்துள்ளனர்.ஏ.டி.பி., தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் வால்பாறை அமீது கூறுகையில், "முதல்வர் அறிவித்த சம்பளம் தொழிலாளர்களுக்கு வழங்குவது குறித்து, தொடர்ந்து பேச்சு நடக்கிறது. தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு பெற்றுத்தருவதில் தொழிற்சங்கங்கள் இணைந்து செயல்பட வேண்டும்,"என்றார்.


நாளைய வரலாறு செய்திக்காக, 


-முஹம்மது ஹனீப், திருப்பூர்.


Comments