'ஹயாபுஸா 2' விண்கலம் களமிறங்கியுள்ளது !! - புவியின் தோற்றம் பற்றிய உண்மைகள் கிடைக்குமா..!
டோக்கியோ: ஆஸ்திரேலியாவில், வேற்று கிரக பாறைகளுடன் களமிறங்கியுள்ள ஜப்பானின் விண்கலம் மூலமாக புவியின் தோற்றம் பற்றிய பல உண்மைகள் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
'ஹயாபுஸா 2' என்ற பெயருடைய விண்கலம், 6 ஆண்டுகளுக்கு முன்னதாக, ஜப்பானால் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 'யுகு' என்ற துணைக்கோளை ஆராய்வதற்காக இது அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது அந்த விண்கலம் பயணத்தை முடித்துக்கொண்டு, அந்த துணைக்கோளிலிருந்து கற்பாறைகளை எடுத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவின் ஊமெரா பகுதியில் தரையிறங்கியுள்ளது.
வேற்றுகிரகத்திலிருந்து பாறைகளை அந்த விண்கலம் கொண்டு வந்திருப்பதால், அவற்றை ஆராய்வதன் மூலமாக புவியின் தோற்றம் பற்றிய பல உண்மைகள் வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது.
-சுரேந்தர்.
Comments