மதுரவாயல் சர்வீஸ் சாலையில் தீ விபத்து..!

 

-MMH

சென்னை: மதுரவாயல் சர்வீஸ் சாலையோரம் உள்ள குப்பை குவியலில் ஏற்பட்ட தீ விபத்தில், அப்பகுதி முழுதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ், வானகரம் சர்வீஸ் சாலையில் குப்பை கொட்டப்பட்டு, அப்பகுதி மலைபோல் தேங்கியுள்ளது. மருத்துவ கழிவுஅவ்வப்போது, மாநகராட்சி மற்றும் வானகரம் ஊராட்சி சார்பில், ஊழியர்கள் குப்பை அகற்றி வருகின்றனர்.

குப்பை கொட்டினால், தண்டனைக்குரிய செயல் என, பதாகைகள் வைத்தும் பயனில்லை. இந்நிலையில், நேற்று மதியம் குப்பையுடன் மருத்துவ கழிவுகளை கொட்டிய சமூக விரோதிகள் சிலர், அதை தீயிட்டுக் கொளுத்தினர்.இதனால் ஏற்பட்ட பயங்கர தீயால், கரும்புகை சூழ்ந்து, வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு, கடும் அவதிஅடைந்தனர்.

பரபரப்புதகவலறிந்து வந்த மதுரவாயல் தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.நெடுஞ்சாலை ஓரம் ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இப்பகுதியில், கழிவுகளோடு மருத்துவ கழிவுகளையும் சேர்த்து கொட்டி விட்டு வருவது, வாடிக்கையாக உள்ளது. இதற்கு, ஊராட்சி மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

-பாலாஜி தங்கமாரியப்பன் சென்னை போரூர்.

Comments