மீண்டும் பாஜக பிரமுகர் மீது பெண் நிர்வாகி புகார்! - கொலை மிரட்டல் விடுவதாகக் குற்றச்சாட்டு!!

 

    -MMH

விழுப்புரம்: டிச - 1

     பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் மாவட்டத் தலைவர் வி.ஏ.டி. கலிவரதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி பொதுச் செயலாளர் காயத்ரி என்பவர் மீண்டும் மனு அளித்துள்ளார்.

விழுப்புரம் கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் காயத்ரி என்பவர் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான விஏடி கலிவரதன் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி தொடர்பாக சில நாட்களுக்கு முன் ஒரு புகார் அளித்தார்.

வி.ஏ.டி கலிவரதனிடமிருந்து தற்பொழுது கொலை மிரட்டல் வருவதாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் மகளிர் அணி பொதுச் செயலாளர் காயத்ரி மீண்டும் ஒரு புகார் மனு அளித்துள்ளார். மேலும் தனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வி.ஏ.டி கலிவரதன் மீது புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். உடனடியாக நடவடிக்கை எடுத்து, தனக்குப் பாதுகாப்பு வழங்கவும் அவர் மனுவில் கோரியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் கலிவரதனும், பாஜக பெண் பிரமுகர் காயத்ரியும் செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

-  பாரூக்,சிவகங்கை.

Comments