வேலை வாய்ப்பு சிறப்பு முகாம்..!!

 -MMH

பொள்ளாச்சியை அடுத்த உடுமலை உள்ள ஜி.வி.ஜி விசாலாட்சி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் நிறுவனகளின் மாபெரும் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என திருப்பூர் மாவட்டம் ஆட்சியர் திரு.விஜய கார்த்திகேயன் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர் கூறுகையில் வேலை தேடும் யார் வேண்டுமானாலும் இந்த மாபெரும் வேலை வாய்ப்பு சிறப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் இந்த முகாமில் சுமார் 140 மேற்ப்பட்ட தனியார் நிறுவனங்கள் 10,000 மேற்பட்ட காலி பணி இடங்களுக்கு ஆட்களை எடுக்க உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் தங்கள் ஆவணங்களோடு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறேன் என கூறினார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.

Comments