கொரோனா தொற்று தீவிரம்..!! அச்சத்தில் உலக நாடுகள்!!

-MMH

இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து நைஜீரியாவிலும் புதிய கொரோனா பரவத் தொடங்கியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போதுள்ள கொரோனாவுக்கே தடுப்பூசியும் விரைவில் வர போவதாக நம்பிக்கை தந்து வருகிறார்கள்.

பிரிட்டனில் ஒரு வைரஸ் பரவி உள்ளது. கொரோனா வைரஸ், புதிதாக உருமாறி மிக வேகமாக பரவி வருவதாக சொல்கிறார்கள்.. இதனால் இங்கிலாந்து இடையேயான விமானப் போக்குவரத்துக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளன.

இப்போது நைஜீரியாவிலும் புதிய கொரோனா உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பற்றி, ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைவர் ஜான் கெங்கசாங் சொல்லும்போது, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவில் பரவும் கொரோனாவை போல இல்லாமல் இது தனி வைரஸாக உருவாகியுள்ளது. 

என்ன வைரஸ் என்று உறுதியாக தெரியவில்லை. புதிய வைரஸ் குறித்து ஆய்வுகளை நடத்தி வருகிறோம். நைஜீரியாவில் கொரோனா பாதிப்பு அதிவேகத்தில் அதிகரிப்பதாக தெரியவில்லை. தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்"" என்றார். விரைவில், நைஜீரியா இடையேயும் விமான போக்குவரத்துக்கு விரைவில் தடை அமல்படுத்தப்படும் என தகவல் கசிந்துள்ளது.

-ஸ்டார் வெங்கட்.

Comments