சென்னையில் உதவி இயக்குனர் அதிரடி கைது!! - போதையில் தகராறு!

     -MMH

    சென்னையில் நேற்று இரவு போலீசார் தெற்கு அவென்யூ சாலையில்  வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது அந்த வழியே  அதிவேகமாக வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த காரை ஒரு இளைஞர் ஓட்டி வந்தார். அவர் அருகில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். 

காவல்துறையினர் அந்த இளைஞரை காரை விட்டு இறங்கும்படி கூறினார். அந்த இளைஞர்களின் இறங்கினார். அவரிடம் மது அருந்தி இருக்கிறாரா என்று கேட்டு மது அருள் இருக்கிறாரா என்பதை  கண்டறியும் பரிசோதனை கருவியில் வாயை  ஊத சொன்னார்கள். சோதனையின் முடிவில் அவர் மது அருந்தி இருப்பது தெரியவந்தது. அப்பொழுது அவர் அருகே அமர்ந்திருந்த பெண் காரில் இருந்து இறங்கி காவல்துறையிடம் நான் யார் தெரியுமா..? என்னை எப்படி இறங்க சொல்வீர்கள்? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்பொழுது அருகில் இருந்த காவல் துறையினரை அவர் காலால் எட்டி உதைத்தார். இந்த காட்சிகள் காவலரின்  சட்டைப்பையில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் மீதும் அவருடன் வந்த இளைஞர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். காரில் போலீசார் ஏற முயற்சி செய்யும் பொழுது அந்த பெண் என்னுடைய காரை நீங்கள் எப்படி ஏறலாம் என்று கேட்டு தகராறு செய்துள்ளார். அதன்பின்னர் காவல் துறையினர் அந்த பெண்ணின் விவரங்களை கேட்டுக் கொண்டு அந்த பெண்ணையும் அவருடன் வந்த இளைஞரையும்  வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மறுநாள் காலையில் அந்த பெண் தன் தாயாருடன் காவல் நிலையத்தில் ஆஜரானார். 

அவர் பெயர் காமினி என்பதும் அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்தவர் என்பதும் துணை இயக்குனராக பணிபுரிகிறார் என்பதும் காவல் துறையினருக்கு தெரியவந்தது. அவருடன் இருந்தவர் அவருடைய நண்பர் சேஷ பிரசாத் என்பது தெரியவந்தது. அப்போது அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

- V.ராஜசேகரன்.

Comments