ரஜினியின் அரசியல் வருகையை விமர்சித்த சீமானுக்கு நடிகையின் பதிலடி!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது அரசியல் வருகையை உறுதி செய்ததிலிருந்து அரசியல் கட்சி தலைவர்கள் அவரது அரசியல் வருகையை பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் ஆக விமர்சனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் சீமான் ரஜினி ஒரு கோழை என்றும் ரஜினியின் தேவை இங்கே தேவையில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
சீமானின் இந்த கருத்துக்கு நடிகை விஜயலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார். அவர் நேற்று தனது முகநூல் பதிவில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் வெளிநாட்டு ஆதரவாளர்களை விட்டு தன்னை மிரட்டிய சீமான் தான் ஒரு கோழை என்றும் அவர் கூறினார்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை வைத்து அரசியல் செய்து வரும் சீமான் ரஜினியை குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை என்றும் அவர் என்ன வெளிநாட்டு பணத்தில் அரசியல் செய்கிறார. தன்னுடைய சொந்த பணத்தில் அரசியல் செய்கிறார் என்றும் விஜயலட்சுமி கூறினார்.
சீமான் கண்ணாடி முன் பார்த்தால் அவர்தான் ஒரு கோழை என்பது அவருக்கு புரிய வரும் என்றும் நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார். இந்த பேஸ்புக் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
-சுரேந்தர்.
Comments