வெள்ள பாதிப்புகளை சிறப்பு கண்காணிப்பாளர் ஆய்வு!!

 

    -MMH

     தஞ்சை மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர் சுப்பையன் மற்றும் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் அவர்கள் பார்வையிட்டனர் . தஞ்சை மாவட்டத்தில் நிவர்  மற்றும் புரெவி புயல்கள்  ஏற்படுத்திய பாதிப்புகளையும் புயல் காரணமாக  தொடர்ந்து பெய்த மழை ஏற்படுத்திய பாதிப்புகளையும் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர் திரு.  சுப்பையன், மாவட்ட ஆட்சியாளர் கோவிந்த ராவ்  மற்றும் அலுவலர்கள் உள்ளாட்சி நிர்வாகிகள் பார்வையிட்டனர் . 

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் விவசாயிகளிடம் வெள்ள பாதிப்புகளை கேட்டறிந்தனர். அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி, மிதமாக பாதிக்கப்பட்ட பகுதி என பிரித்து ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கும் உள்ளாட்சி  அலுவலர்களுக்கும் உத்தரவிட்டனர் .மேல உளூர், பருத்திக்கொட்டை, ஒரத்தநாடு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கியதை கணக்கெடுக்கும் படி  உத்தரவிட்டனர், 

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ராஜசேகரன், தஞ்சாவூர்,

Comments