மண் அகற்றியதால் நிம்மதி!! மீண்டும் தோண்டியதால் அவதி!!!

 

-MMH

     அவிநாசி வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரில், குவித்து வைக்கப்பட்டிருந்த மண் அகற்றப்பட்டது.குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், அவிநாசி பிரதான ரோட்டோரம் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. குழி பதிக்க தோண்டப்படும் மண் சரிவர மூடாமல், குவியலாக போடப்படுவதால், இடையூறு ஏற்படுகிறது.அவிநாசி வி.ஏ.ஓ., அலுவலகம் முன், மண் குவியலாக இருந்ததால், இடையூறு ஏற்பட்டது. 

குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், குழாய் பதிக்கும் பணிக்கென, மண் அகற்றப்பட்டு, சமப்படுத்தப்பட்டது. பதிக்கப்பட்ட, குழாயில் பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டது.பொதுமக்கள் கூறுகையில், 'அவிநாசியில் பல இடங்களில் குழாய் அமைக்க குழி தோண்டினர். ஆனால், மீண்டும் முறையாக மண் நிரப்பவில்லை. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். அதிலும், சேவூர் ரோடு, கிழக்கு, மேற்கு ரத வீதிகளில், விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறையினர், மண்ணை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

நளையவரலாறு செய்திக்காக, 

-முஹம்மதுஹனீப் திருப்பூர்.

Comments