எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம்!! - மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பும் மக்கள்!!

-MMH
     கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகள் பெரும்பாலும் கிராமங்களாக உள்ளன. இந்த கிராமங்களில் அதிகப்படியான மக்கள் வீடுகளில் மாடுகள் வளர்த்து வருகின்றன. சில வருடங்களுக்கு முன்பு பெரும்பாலான வீடுகளில் சாண எரிவாயு கலன் அமைத்து  அடுப்பு எரித்து வந்தனர். காலப்போக்கில் கேஸ் சிலிண்டருக்கு மாறிவிட்டனர். இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் மாதம் மாதம் கேஸ் சிலிண்டர் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு மக்கள் மீண்டும் சாண எரிவாயு கலன் அமைத்து அடுப்பு எரித்தால் மாதம் மாதம் கேஸ் சிலிண்டருக்கு செய்யும் செலவு சேமித்துக் கொள்ளலாம், அதே சமயம் அரசின் நிதி சுமையும் குறையும் எரிவாயு எடுக்க பயன்படுத்திய சாணத்தை இயற்கை உரமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.    

சாண எரிவாயு கலன் அமைக்க குறைந்தது இரண்டு மாடுகள் வளர்க்க  வேண்டும் வீட்டின் அருகே கொஞ்சம் இட வசதி இருக்க வேண்டும். சாண எரிவாயு கலன் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் மூலம் பயிற்சி பெற்ற நிபுணர்களால் அமைத்து தரப்படும். இதை அமைத்த பிறகு ரூபாய் 12000 மானியமாக பெறலாம் விருப்பம் உள்ள நபர்கள் தங்கள் பகுதி ஒன்றிய அலுவலகத்தை அணுகி பயன்பெறுங்கள். 

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

     

Comments