ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை !!
சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம்ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில், ஜெயலலிதாவின் நினைவு தினத்தைகடைபிடித்து வருகின்றனர்.
இன்று சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
-பாலாஜி தங்கமாரியப்பன்,
சென்னை போரூர்.
Comments