பொள்ளாச்சியில் சுற்றி திரிந்த சேவல் திருடன் கைது..!!

 

-MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியாற்றை அடுத்த பூவளபருத்தி என்ற கிராமத்தில் முருகேஷன் என்பவரின் தோட்டத்து சாலையில் கட்டி வைக்கப்பட்டு இருந்த மூன்று சேவல்கள் காணாமல் போயின.

இதனால் அதிர்த்த முருகேஷன் ஆழியாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தார் .புகாரை தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் சேவல் திருட்டில் ஈடுபட்ட தமிழரசு (வயது 22) என்பவரை கைது செய்ததோடு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் பின்னர் நீதிபதியின் உத்தரவின் படி அவரை சிறையில் அடைத்தனர் . பொள்ளாச்சியின் பல்வேறு பகுதிகளில் சேவல் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சிஅடைத்து உள்ளனர் .

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.

Comments