உடல் நலம் மேம்படுத்த சலபாசனம் செய்து பாருங்கள்!!


   -MMH

     இன்றுள்ள பலரும் தங்களின் உடல்நலம் மற்றும் மனநல ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பொருட்டு ஆசனங்கள், யோகாக்கள் செய்து வருகின்றனர். அந்த வகையில், சலபாசனம் செய்வது எப்படி? அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இன்று காணலாம். 

சலபாசனம் செய்வதால் குடல், இரைப்பை, பித்தப்பை போன்ற உடல் உறுப்புகளை பாதுகாக்கும். மலச்சிக்கல் பிரச்சனையை அடியோடு விரட்டி சரிசெய்யும். வயிறு பெரிதாக உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கூட சலபாசனத்தை செய்து வந்தால் வயிறு இயல்பு நிலைக்கு திரும்பும். 


சலபாசனத்திற்கு முதலில் புகைப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளதை போல குப்புற படுத்து, இரண்டு கைகளையும் மூடிய நிலையில் வயிற்றின் அடியில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மூச்சை உள்ளே இழுத்து, கைகளை தரையில் அழுத்தி கால்களை விறைப்பாக மேலே தூக்க வேண்டும். 

இவ்வாறு தொடர்ந்து செய்து வர உடல் நலம் மேம்படுவதை சில நாட்களிலேயே நாம் உணரலாம். இதனால் வயிற்று பகுதி பலமடையும். பெருங்குடல், சிறுகுடல் பலமடையும். மலச்சிக்கல் சரியாகும். கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்றவை நன்றாக வேலை செய்யும். ஜீரணம், வயிற்று வலி சரியாகும். தொந்தி கரையும். இடுப்பு வலி சரியாகும்.

-ஸ்டார் வெங்கட்.

Comments