சிவகங்கையில் அம்மா மினி கிளினிக்!!

 -MMH

     சிவகங்கை மாவட்ட சேர்மன் பொன்மணி பாஸ்கரன் முயற்சியில் முசுண்டப்பட்டியில் அம்மா மினி கிளினிக்!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா, எஸ்.புதூர் ஒன்றியம் முசுண்டப்பட்டி கிராமத்தில்  தமிழக அரசின் லேட்டஸ்ட் திட்டமான உருவான அம்மா மினி கிளினிக்!

தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சர் G.பாஸ்கரன், மாவட்டக் கழகச் செயலாளர் திரு.PR.செந்தில்நாதன் மற்றும் சிவகங்கை மாவட்ட 1வது வார்டு கவுன்சிலரும்.மாவட்ட சேர்மன் பொன்.மணி.பாஸ்கரன் இணைந்து மேற்கொண்ட முயற்சியால் அம்மா மினி கிளினிக், சிங்கம்புணரி வட்டத்தின் கடைக்கோடி கிராமமான முசுண்டபட்டியில் விரைவில் துவங்க உள்ளது.

 ஊராட்சிச் சேர்மன் பொன்மணி.  அம்மா கிளினிக் அமையவிருக்கும் கட்டிடத்தை பார்வையிட்டு முசுண்டபட்டி ஊர் பொதுமக்களிடம் கலந்துரையாடினார். ஊர் பொதுமக்கள் முதல்வருக்கும் மாவட்ட சேர்மனுக்கும் நன்றியை தெரிவித்துகொண்டனர். விரைவில் அமைச்சர், அம்மா கிளினிக்கை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது.

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments