அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் திமுகவினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்!!

 

     -MMH 


"ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப் போறாரு"

 திராவிடர் முன்னேற்ற கழகத் தலைவர்  திரு மு. க. ஸ்டாலின்  அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்ட செயலாளர் S.கல்யாணசுந்தரம் அவர்களின் வழிகாட்டுதலின்படி பாபநாசம் சட்டமன்ற தொகுதி, அம்மாபேட்டை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் "அதிமுகவை நிராகரிக்கிறோம்" என்கிற கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. 

அதன்  தொடர்ச்சியாக  அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் P.S.குமார் ,ஒன்றிய கவுன்சிலர் கிஷோர் குமார், திமுக விவசாய தொழிலாளர் அணி செயலாளர் சண்முகவேல், தெற்கு ஒன்றிய   மாணவரணி துணை அமைப்பாளர் பிரேம்குமார் மற்றும்  கழகத்தினர்  வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரம் வழங்கி அவர்களிடம்  அதிமுக ஆட்சியில் உள்ள குறைகளை கேட்டறிந்தனர்.

 மேலும்  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சேலம்- சென்னை எட்டு வழி நெடுஞ்சாலை,நீட் தேர்வு, விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு  அதிமுக  ஆதரவு  ஆகியவற்றை விளக்கி துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று  விநியோகித்தனர்.  திமுக ஆட்சி மீண்டும் வர வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் விழிப்புணர்வு செய்தியாக கொண்டு சென்றனர். திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை விளக்கி விளக்கவுரையும் கொடுத்தனர் . 

நாளைய வரலாறு செய்திக்காக,

 -V.ராஜசேகரன்,தஞ்சாவூர்.

Comments