போடியில் பரவலாக சாரல் மழை!!
போடி: போடியில் திங்கள் கிழமை பகல் முழுவதும் விட்டு பரவலான சாரல் மழை பெய்தது. நிவா் புயல், புரெவி புயல் என அடுத்தடுத்த புயல்களால் போடி பகுதியில் தொடா்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
திங்கள்கிழமை காலை முதலே மேகங்கள் சூழ்ந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. நேரம் செல்லச் செல்ல சாரல் மழை பெய்யத் தொடங்கியது. பிற்பகலில் பலத்த மழை பெய்தது. குரங்கணி மலை பகுதியிலும் பரவலான சாரல் மழையும், பலத்த மழையும் மாறி மாறி பெய்ததால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்தது.
மலை பகுதியில் பல இடங்களில் நீரோடைகள் நீா் வீழ்ச்சி போல் காணப்பட்டன. ஓடைகளிலும் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஆசிக்,தேனி.
Comments