நகைக்கடை திறப்பு விழா - பெரியகருப்பன் எம் எல் ஏ திறந்து வைத்தார்!!

-MMH

சிங்கம்புணரியில் காந்திமதி நகைக்கடையை பெரியகருப்பன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 1973ஆம் வருடத்திலிருந்து செயல்பட்டு வரும் பாரம்பரிய நகைக்கடையான காந்திமதி நகைக்கடை நிறுவனத்தினர், நவீன வசதிகளுடன் கூடிய புதிய நகைக்கடை ஒன்று கட்டியுள்ளனர்.

அந்த புதிய “காந்திமதி நகைக்கடை” திறப்புவிழாவில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு முன்னாள் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. இராம.அருணகிரி அவர்கள் தலைமை தாங்கினார்.

பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

- பாரூக் சிவகங்கை.                

Comments