சீரழியும் வியாபாரிகள் சிறு தொழில் முடக்கம்..!!

 

-MMH 

கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையால் சாலையோர வியாபாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காய்கறி வியாபாரம், அழகுசாதனப் பொருள் வியாபாரம், வீட்டு உபயோக பொருட்கள் செய்யும் வியாபாரம், துணி வியாபாரம், செருப்பு வியாபாரம், மற்றும் சிறு சிறு தொழில் செய்யும் வியாபாரம் அனைத்தும் முடங்கிய நிலையில்.

வியாபாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வீட்டிலேயே முடங்கும் நிலை காணப்பட்டுள்ளது இதனால் அவர்களுடைய குடும்பம் பெரும் துயரத்துக்கு தள்ளப்பட்டு தினந்தோறும் வாழ்வதற்கு என்ன செய்ய போகிறோம் என்ற நிலை இருப்பதால்??? இந்த சிறு வியாபாரிகளுக்கு அரசு உதவ வேண்டும் என்று சிறு வியாபாரிகள் சார்பாக சமூகஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள்.

-ஈஷா கோவை.

Comments