கொலை செய்ய வந்து, கொள்ளைக்காரர்களாக நாடகமாடிய கூலிப்படையினர் கைது..!
பொன்னமராவதியை அடுத்த கோவனூரில் நகைக் கொள்ளையர்களாகக் கருதப்பட்ட நபர்கள் கொலை செய்ய வந்த கூலிபடையினர் எனத் தகவல். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கோவனூரில் சாந்தி என்பவர்
தனது வீட்டின் முன்பு அமர்ந்து கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 5 பேர் சாந்தியிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது போல் வந்துள்ளனர். அவர் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கும் போது, சாந்தி அணிந்திருந்த 6பவுன் செயினை பிடுங்கியுள்ளனர்.
சாந்தி அவர்களை தடுக்க முற்பட்ட போது, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சாந்தியின் உச்சந்தலையில் வெட்டிவிட்டு சாந்தியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலி செயினை பறித்துள்ளனர். சாந்தி போட்ட சத்தத்தில் அக்கம்பக்கம் இருந்து ஊர்காரர்கள் வந்ததும், அந்தக் கும்பல் தங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து
தப்பி ஓடியுள்ளனர். உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு பொன்னமராவதி காவல்துறையினர் விரைந்துள்ளனர்.இதனிடையே ஊர்காரர்கள் திருடர்களை துரத்திச் செல்லும்போது, கோவனூர் விலக்கில் கும்பலில் இருந்த முகிலன் என்பவர் தடுமாறி வழுக்கி விழுந்து உருண்டதில் முகிலனுக்கு வலது கைமணிக் கட்டில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது.
முகிலனைப் பிடித்து காவல்துறை விசாரணை செய்ததில் மேற்படி சாந்திக்கும் அவரது வீட்ருகில் இருக்கும் வசந்தா என்பவருக்குமிடையே சுமார் 3 வருடங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக வாயத்தகராறு முற்றி சண்டை ஏற்பட்டுள்ளது.
மேலும் சாந்தி, வசந்தாவை அவமானபடுத்தியுள்ளார். இதனை முன்விரோதமாக கொண்டு வசந்தா மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். தற்போது சிங்கப்பூரில் வசித்து வரும் வசந்தாவின் மகன் தங்கத்திடம், சாந்தி தன்னை மிகவும் அவமானப்படுத்தியதாக கூறியுள்ளார்.
உடனே அவரது மகன் தங்கம் சிவகங்கையைச் சேர்ந்த அழகு (எ) அழகுபாண்டி என்பவர் மூலமாக கூலிப்படையினர் ஏற்பாடு செய்துள்ளார். முகிலன், ஆனந்த், ஆசை, அமுல் ஆகியோரை கூலிப்படையினராக ஏற்பாடு செய்து சாந்தியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.
கொலைக்கான நோக்கத்தை திசை திருப்ப எண்ணி சாந்தியை வெட்டி விட்டு, தாலியை பறித்துச் சென்றுள்ளனர். மேலும் பொதுமக்கள் உதவியுடன் கொலை செய்யும் நோக்கத்துடன் வந்த முகிலனை பொன்னமராவதி காவல்துறையின் பிடித்தனர்.
குற்றவாளிகளைப் பிடித்த பொன்னமராவதி காவல் துணைக்கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன், பொன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன் அவர்களையும் மற்றும் தனிப்படையினரையும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்கள். பொன்னமராவதி காவல்துறையினரை பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினர்.
-அப்துல்சலாம், திருப்பத்தூர்.
Comments