உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் அருகம்புல் சாறு !!

  -MMH

   உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் சாறுகளை நாம் தினமும் அருந்தி வருகிறோம். அந்த வகையில், அருகம்புல் சாறு தயாரிக்கும் முறை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் குறித்து இன்று காணலாம்.

அறுகம்புல் ஜூஸ் தேவையான பொருட்கள் : 

அறுகம்புல் - அரை கட்டு,

சுக்குத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன்,

பனங்கருப்பட்டித்தூள் - ஒரு டீஸ்பூன், 

ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை : 

எடுத்துக்கொண்ட அருகம்புல்லை சுத்தம் செய்து நீர்விட்டு மையாக அரைத்து எடுத்து வடிகட்டி வைக்க வேண்டும். பின்னர் அதில் சுக்குத்தூள், பனங்கருப்பட்டி தூள், சீரகத்தூள், ஏலக்காய் தூள் சேர்த்து வடிகட்ட வேண்டும். இந்த அருகம்புல் சாறினை பெரியவர்கள் 100 மில்லி அளவும், சிறியவர்கள் 30 மில்லி முதல் 50 மில்லி வரை அருந்தலாம். 

அருகம்புல் சாறால் ஏற்படும் நன்மைகள் : 

அருகம்புல் சாறினை குடித்து வந்தால் இரத்தத்தினை சுத்திகரித்து, சரும பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கும். மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும். உடலில் தேங்கியுள்ள நச்சு கழிவுகள் வெளியேற்றப்படும். நீரழிவு மற்றும் இரத்த கொதிப்பு நோய்களை கட்டுக்குள் வைக்கும். சருமம் பொழிவாக இருக்க விரும்புவார்கள் அருகம்புல் சாறை குடிக்கலாம்.

-ஸ்டார் வெங்கட் .

Comments