கட்டுக்குள் கொண்டு வராத பிளாஸ்டிக் பை..!!

 

     -MMH

     கோவை மாவட்டத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழக அரசு ஆணைப்படி பிளாஸ்டிக் கவர்களை ஒழிக்கும் திட்டம் அமல்படுத்தி, கோவை மாநகர் முழுவதும் இருக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகளின் தரம் குறைவான பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து பிளாஸ்டிக்கை ஒழிக்கும் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில் இன்னும் சில இடங்களில் தரம் உள்ளதா என்று தெரியாத  பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் உள்ளன என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் பாதுகாப்பு நலன் கருதி ஒவ்வொரு கடைகளாக ஆய்வு நடத்த வேண்டும் என்றும் இதற்கு மக்களும் ஒத்துழைப்பு தந்து பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று அரசும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

-ஈஷா, கோவை.

Comments