அழிந்து வரும் கூடை தொழில் கண்டுகொள்ளுமா அரசு...!!

     -MMH

     கோவை மாவட்டத்தில் பல தொழில்களில் கூடை செய்யும் தொழிலும் ஒன்று. அந்த வகையில் கூடை பின்னும் தொழில் அழிந்து வருகிறது என்று  தொழிலாளி ஒருவர் மன வேதனை தெரிவித்தார்.

இவர்கள் பின்னும் மூங்கில் கூடை சமையல் செய்வதற்கு முன் அரிசியை வடிப்பதற்கும், பூக்கள் அள்ளுவதற்கும், பூ, பழங்கள் போன்றவற்றை பார்சல் செய்வதற்கும், பெண் குழந்தைகள் பூப்படைந்து விட்டாள் ஓலை செய்து கொடுப்பதற்கும். இப்படி பலவகையில்  கை வண்ணத்தில் வேலை செய்து வரும் கூடை பின்னும் தொழிலாளர்கள் வெகுவாக குறைந்து வருகிறார்கள். என்று மன வேதனையுடன் தெரிவித்தார். அரசு இவர்களைப் போல் தொழில் செய்பவர்களை  ஊக்குவிக்க வேண்டும் என்று கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

-ஈஷா,கோவை.

Comments