காட்டு யானை தாக்கியதில் வனக்காவலர் மற்றும் தன்னார்வலர் உயிரிழப்பு!!

 -MMH

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் வனக்கோட்டம், விளாமுண்டி வனச்சரகத்தில்  மழைக்கு பிந்தைய வன உயிரின கணக்கெடுப்பு பணி 17.12.2020 அன்று மேற்கொண்டிருந்தபொழுது, களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளடக்கிய கணக்கெடுப்பு குழுவினரை சுமார் மாலை 3.45 மணியளவில் சிங்கமலை காவல் சுற்றில் காட்டுயானை தாக்க தொடங்கியதில் வனக்காப்பாளர் திரு பா. பொன்கணேசன், காட்டுயானையால் தாக்கப்பட்டு காயமடைந்தார். 

காயமடைந்த திரு பா.பொன்கணேசன், வனக்காப்பாளரை மீட்க சென்ற போது சுமார் 4.30 மணியளவில் சிங்கமலை காவல்சுற்று வனக்காவலர் திரு கு. சதீஸ்குமார் காட்டுயானையால்  தாக்கப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். காட்டு யானை தாக்குதல் நிகழ்த்தியதில் தப்பி காட்டுக்குள் சென்ற பிற குழுவினரை தேடுகையில், தன்னார்வலர் திரு ப. முத்து பிரபாகர சேரபாண்டியன் என்பவரும் யானை தாக்கி  உயிரிழந்துள்ளார். 

1. திரு கு. சதீஸ்குமார், வனக்காவலர் (வயது 24) – இறப்பு

2. திரு ப. முத்து பிரபாகர சேரபாண்டியன் த/பெ எம். பசும்பொன் தன்னார்வலர் – இறப்பு

3. திரு பா. பொன்கணேசன், வனக்காப்பாளர் - படுகாயம் (சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்)

-ஸ்டார் கணேசன்.

Comments