எந்த சாலையும் சரியில்லை வாகன ஓட்டிகள் அதிர்ச்சி...!!

 

-MMH

கோவை மாவட்டம் முழுவதுமாக இருக்கக்கூடிய சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். கடந்த சில வருடங்களாக கோவை மாவட்டத்தை ஸ்மார்ட் சிட்டி என்று அறிவிப்பதற்கு வேலை நடந்த வண்ணம் உள்ளன இந்நிலையில் அங்கு இருக்கக்கூடிய சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு தண்ணீர் குழாய் பதிக்கும் பணியும் மற்றும் கேபிள் பதிக்கும் பணியும் மற்றும் மேம்பால பணிகளும் நடைபெறுவதாலும்.

மாநகராட்சி நிர்வாகம் அந்தப் பணியினை நடத்தி வருவதால் ரோடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று நிலை உருவாகியுள்ளது. இந்தப் பணிகள் நடந்து முடிந்து பிறகு பொதுமக்கள் சிரமமில்லாமல் பயணிக்கலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் தரப்பில்  கூறப்பட்டது.

இருப்பினும் மழைக்காலமாக இருப்பதால் ஆங்காங்கே பெரிய அளவில் குழிகளாக காணப்படுவதால் சாலை விபத்தை ஏற்படுத்தி வருகிறது என்ற அச்சமும் வாகன ஓட்டிகளுக்கு இடையே நிலவுகிறது விரைவில் இந்தப் பணியை முடித்து தர வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஈஷா கோவை.

Comments