தமிழ் முன்மொழி என்று அமெரிக்கர் புகழாரம்..!!

-MMA 

கோவை மாவட்டம் கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் உருவான தமிழ் என்று அமெரிக்க மொழி ஆய்வாளர் தமிழுக்கு புகழாரம் சூட்டினார். தமிழகத்தில் தமிழ் தமிழ் என்று எவ்வாறு கூறினாலும் அது நகரங்களில் வாழும் சில மனிதர்களுக்கு புரிவதில்லை தெரிவதில்லை இது ஒருபுறமிருக்க இன்றைய நம் குழந்தைகளிடம் இருக்கும் தமிழோ தலை சுத்தி வருகிற நிலையும் காணப்படுகிறது.

ஆங்கில மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழ் மொழியான தாய் மொழியை சரிவர எழுதவோ படிக்கவோ தெரியாத நிலையில்தான் இன்றைய மாணவ செல்வங்கள் நம் ஊரில் தான் இருக்கிறார்கள் இது வேதனை அளிக்கிறது.

அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நாம் உயிரிலும் மேலான தமிழ் மொழியை நேசிப்போம் குழந்தைகளுக்கு தூய தமிழை கற்று தருவோம் வாழ்க தமிழ்.

-ஈஷா கோவை.

Comments