முகம் பளபளப்பாகவும் ஜொலிப்புடனும் இருக்க வேண்டுமா...!!

   -MMH

    முகம் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். முகம் பொலிவுடனும் ஜொலிப்புடனும் இருக்க வேண்டும் என்றால் இந்த பானம் குடிக்கும் பழக்கத்தை வைத்து கொள்ளுங்கள்.அந்த பானம் தான் பாதாம் ராகி மால்ட். 

பாதாம் ராகி மால்ட் செய்ய தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 5 டேபிள் ஸ்பூன்

பால் – 2 கப்

தண்ணீர் – அரை கப்

சர்க்கரை – 2 டீஸ்பூன்

ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்

நறுக்கிய பாதாம் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கேழ்வரகு மாவை போட்டு, சில நிமிடம் வாசனை வரும் வரை நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும்.

பின்பு பாத்திரத்தில் சிறிது பாலை ஊற்றி, அதில் வறுத்த ராகி மாவை சேர்த்து, நன்கு கலந்து தனியாக எடுத்து கொள்ளவும்.

அதன் பின்பு அடுப்பில் கடாயை வைத்து அதில் மீதமுள்ள பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும் . மேலும் பாலானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் கலந்து வைத்த ராகி பேஸ்ட், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் சேராதவாறும், பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறி விடவும்.

இறுதியில் அதனுடன் ஏலக்காய் பொடி, தேன் சேர்த்து கிளறி இறக்கியபின், பாதாம் பொடியை சேர்த்து சிறிது கிளறி, பரிமாறினால் ருசியான பாதாம் ராகி மால்ட் தயார்.

-ஸ்டார் வெங்கட்.

Comments