புதுப்பொலிவுடன் பூங்காக்கள்!- மக்கள் மகிழ்ச்சி...!!

 

    -MMH

     கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் ரோடு ஈஸ்வரி நகர் அருகில் இருக்கக்கூடிய பூங்கா ஒன்று சிறப்பான முறையில் பராமரிக்கப்படுவதால் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

கோரோனா என்னும் கொடிய நோய் பரவி பல உயிர்களைப் பலி வாங்கிய நிலையில் மக்களை கடந்த சில மாதங்களாகவே வீட்டிலேயே முடக்கிய நிலையில் மெல்ல மெல்ல மக்கள் வெளியே வரும் சூழ்நிலை வந்துள்ளது.

இந்நிலையில் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வெளியே வரும் மக்கள் பூங்காக்களை பெரிதும் விரும்புகின்றனர். அந்த வகையில் போத்தனூரில் அமைந்துள்ள பூங்காவை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்களின் ஆணைக்கிணங்க, எட்டிமடை சண்முகம் MLA அவர்களால் துவங்கப்பட்டு, போத்தனூர் பகுதி செயலாளர்  A. ரஃபிக் அவர்களின் மேற்பார்வையில், பன்னீர் KS மோகன் அவர்களின் பராமரிப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

இந்தப் பூங்காவில் குழந்தைகள் மகிழும் வகையில் விளையாட்டு சாதனங்களும் பெரியவர்களுக்கான உடல்பயிற்சி கூடமும் இருப்பதால் அந்தப் பகுதி வாழ் மக்கள் பெருமளவில் இந்தப் பூங்காவிற்கு வந்து மகிழ்கின்றனர்.

-ஈஷா,கோவை.

Comments