பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு!!

     -MMH

    உடுமலை : உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், மலைமேல், 960 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்கம் அருவி உள்ளது. ஆன்மிக, சுற்றுலா தலமான இங்கு தினமும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக, மார்ச் முதல், சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை நீடித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ள வட கிழக்கு பருவ மழையால், பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில், பல அடி உயரத்திற்கு காட்டாற்று வெள்ளம், ஆர்ப்பரித்து கொட்டுவது, கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது.நேரில் ரசிக்க முடியாத நிலையில், வரும், 14 முதல் சுற்றுலா தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளதால், ஒரு வாரத்தில் பஞ்சலிங்கம் அருவிக்கு செல்லும் வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாளையவரலாறு செய்திக்காக, 

-ஹ.மு.முஹம்மதுஹனீப், திருப்பூர்.

Comments