QR கோடை ஸ்கேன் செய்யும் போது உஷார்! - தொழில்நுட்ப திருடர்கள்..!

-MMH 

     இன்றைய காலகட்டத்தில் எந்த திருடனும் முகத்தில் மச்சம் வைத்துக்கொண்டு, பார்க்க திருடன் போல் இருப்பதில்லை. ரொம்ப நாகரீகமாகவே பேசி நம்ப வைத்து, பணத்தை கையகப்படுத்தி விடுகிறார்கள்.  டிஜிட்டல் உலகத்தில் பணத்தை க ளவாட இந்த நவீன தி ருடர்கள் கையாளும் வழிமுறைகள் இருக்கே? பணத்தை சம்பாதிப்பது பெரிய விஷயமல்ல, சம்பாதித்ததை காப்பற்றுவது தான் இங்கு பெரிய யுக்தி.

நாமெல்லாம் QR code ஸ்கேன் செய்வது பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஷாப்பிங் போனால் அங்கு நேரடியாக பணம் கொடுக்காமல், பெரும்பாலானோர் QR code ஸ்கேன் செய்து அதன் மூலம் பணம் செலுத்துவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த QR code மூலமும் மோச டி செய்ய பல வாய்ப்புகள் உள்ளது.

உஷாராக இருக்க வேண்டி அ லார்ட் செய்ய தான் இந்த பதிவு. பெங்களூரில் திலீப் பந்தாரி எனும் நபர் ஒருவர் தனது வீட்டில் உள்ள கட்டில் மெத்தையை விற்க ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார். அதனை பார்த்த உடனே லட்சுமணன் சிங் எனும் நபர், தனக்கு திலீப் விளம்பரம் செய்த கட்டில் மெத்தை பிடித்திருப்பதாகவும் 25,000 ரூபாய்க்கு உடனே அதனை வாங்கிக்கொள்வதாகவும் கூறியிள்ளார்.

உடனே லட்சுமணன், திலீப் என்பவருக்கு QR code ஒன்றை அனுப்பி இதனை ஸ்கேன் செய்யுமாறு கூறியுள்ளார். மேலும் நீங்க அந்த QR code ஸ்கேன் செய்தால் தான், நான் உங்களுக்கு 25,000 ரூபாயை உங்களது அக்கவுண்டிற்கு அனுப்ப முடியும் என கூறியுள்ளார். இது குறித்த பெரிய விழிப்புணர்வு இல்லாத திலீப், நம்பி ஸ்கேன் செய்துள்ளார். 

உடனே இவரது அக்கவுண்டிலிருந்து 10,000 ரூபாயை எடுத்துவிட்டனர். உடனே திலீப், தன்னை ஏமாற்றிய லட்சுமணனுக்கு தொடர்பு கொண்டு நடந்ததை எல்லாம் கூறியுள்ளார். அந்த நபரோ தவறுக்கு மன்னிப்பு கேட்டு, உங்களது பணத்தையும் கட்டிலுக்கு உண்டான 25,000 ரூபாயையும் ஒன்றாக அனுப்பிவிடுகிறேன் என கூறி மீண்டும் QR code ஒன்றை அனுப்பியுள்ளார். திலீப் என்பவரும் நம்பி மீண்டும் அதனை ஸ்கேன் செய்துள்ளார், மீண்டும் அக்கவுண்டிலிருந்து 40,000 ரூபாயை எடுத்துவிட்டார்கள். மீண்டும் அந்த லட்சுமணன் என்பவருக்கு கால் செய்தால் அவன் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இது போன்ற திருட்டு வேலை செய்யும் நபர்கள், பரிசு தொகை உங்களுக்கு விழுந்திருக்கு அதனை பெற நாங்க கொடுத்துள்ள QR code ஸ்கேன் செய்ய வேண்டும் என்பார்கள். அப்படி ஸ்கேன் செய்துவிட்டால் உங்க பணம் அத்தனையும் அவர்களது கையில்! சில திருடர்கள் PIN எண் கேட்பார்கள் இன்னும் சிலரோ, OTP எண்ணை கேட்பார்கள். சிலர் QR code ஸ்கேன் செய்ய சொல்வார்கள்.

இவர்களது முதல் குறிக்கோளே உங்களது ஆசையை தூண்டிவிட்டு, உங்களது அக்கவுண்டை காலி செய்வது தான். இன்றைய காலகட்டத்தில் இதோ போன்ற மெசேஜ்கள் எல்லோருக்கும் வருகிறது. நவீன தி ருடர்கள் நூறு பேருக்கு இது போன்ற மெசேஜ்களை அனுப்பினால் அதில் ஒருவன் பேராசைபட்டு ஏ மாந்துவிடுகிறான். அந்த தனிஒருவனாக மட்டும் இருந்து விடாதீர்கள். இன்றைய காலத்தில் பணத்தை சம்பாதிப்பது மட்டும் புத்திசாலித்தனம் அல்ல, அதனை சரியாக நிர்வாகிப்பதற்கும் சாமர்த்தியம் அவசியம்.

-ஸ்டார் வெங்கட்.      

Comments