11 பெண்களை திருமணம் செய்து ஏமாத்திருக்கேன்... இதெல்லாம் எனக்கு சகஜம்!!

     -MMH

11 பெண்களை திருமணம் செய்து ஏமாத்திருக்கேன்.. இதெல்லாம் எனக்கு சகஜம்! மனைவியின் புகாரால் சிக்கிய கணவன் மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்த நிலையில், அவர் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மலர் (20). இவருக்கு சென்னை பாரதி நகர் ஏபிசி காலனி பகுதியை சேர்ந்த கணேஷ் (22) என்பவருடன் கடந்த 2017-ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு, அதன் பின் காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து இருவரும், கடந்த டிசம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

வீட்டை விட்டு சென்ற மலர் காணாததால் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதை அறிந்த மலர் மற்றும் கணேஷ் குறித்த காவல்நிலையத்திற்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.

அப்போது, மலர் போலீசாரிடம், கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு தனியாக வசிக்கிறேன். அவருடன்தான் வாழப்போகிறேன். இதில் யாரும் தலையிட வேண்டாம் என்று மலர் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் வில்லிவாக்கம் காவல் நிலையம் அருகே ராஜாஜி நகரில் ஒரு வாடகை வீட்டில் குடியோறினர்.

திருமணம் நடந்த அன்று இரவே, கணேஷ், வீட்டு வேலைக்கு என கூறி அயனாவரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, அழைத்து வந்துள்ளார். இது பற்றி மலர் கேட்டதால் கணேஷ் ஆத்திரமடைந்தார்.

மலரை தனியறையில் அடைத்துவைத்து சித்ரவதை செய்தார். அவ்வப்போது, சிறுமியை கட்டாயப்படுத்தி அவருடன் கணேஷ் நெருக்கமாக இருந்துள்ளார்.

மலரின் கைகளை கட்டி, அவரது வாயில் துணியை திணித்து பலமுறை வற்புறுத்தி நெருக்கமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் கணேஷின் நடவடிக்கையால் விரக்தியடைந்த மலர், என்னை எப்படியாவது விட்டு விடுங்கள்' என்று கதறி அழுதுள்ளார்.

அதனால் அவரை சமாதானப்படுத்தி மது அருந்த வைத்து, 17 வயது சிறுமியுடன் உறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். அதை செல்போனில் வீடியோவாகவும் படம் எடுத்துள்ளார்.

இதனால் விரக்தியின் உச்சத்துக்கே மலர் சென்றுள்ளார். அந்த காட்சியை அவரது நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார் கணேஷ்.

அதை பார்த்த 4 பேர், கணேஷ் வீட்டுக்கு வர, அந்த நண்பர்களுக்கு மலரை விருந்தாக்க கணேஷ் முடிவு செய்தார். மலரின் அலறல் சத்தம் கேட்டு 4 பேரும் ஓடி விட்டனர். சிறிது நேரத்தில் மலரை நிர்வாணப்படுத்தி கைகளை கட்டி போட்டு, வாயை துணியால் கட்டி, கணேஷ் சித்ரவதை செய்துள்ளார்.

இதுபோன்ற, கொடூரமான சம்பவத்தால் மலர், செய்வதறியாது தவித்தார். எல்லை மீறியதால் வீட்டின் உரிமையாளரிடம், நடந்தவற்றைகூறி கதறி அழுதுள்ளார்.

அவரது உதவியுடன் பெற்றோர் வீட்டுக்கு மலர் தப்பிச் சென்று, பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார்.

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், கணேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சென்னையில் இது போல் பல பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்துள்ளேன். அந்த சம்பவங்களை மலரிடம் கூறியிருக்கிறேன். மொத்தம் 11 பெண்களை திருமணம் செய்து, அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளேன். இது ஒன்றும் எனக்கு புதிதல்ல என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், இதுபோன்று, வேறுயாரோனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் காவல் நிலையத்தில் தொடர்ப்பு கொண்டு, கணேஷ் பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம். பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கணேஷ், 17 வயது பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் சித்திரவாதை செய்தது. விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால். போக்சோ மற்றும் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

-பாலாஜி தங்கமாரியப்பன்,சென்னை போரூர்.

Comments