பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ பிடி இறுகுகிறது! அருளானந்தம் வாக்குமூலம் எதிரொலி - மேலும் 3 பேர் கைதாக வாய்ப்பு..?

     -MMH 

     கோவை. ஜனவரி. 8- கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் இளம் பெண்களை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்தது. இதுகுறித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கும்பலால் பாதிக்கப்பட்ட பொள்ளாச்சி மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி  போலீசார் வழக்கு பதிவு செய்து மாக்கினாம்பட்டி சேர்ந்த பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, சபரிராஜ், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. 

சிபிஐ விசாரணையில் சபரிராஜன் நண்பர்களான முன்னாள் அதிமுக நகர மாணவரணி செயலாளராக அருளானந்தம்,பைக் பாபு, ஹாரன் பால்,சேர்ந்து 3 பெண்களை காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியது தெரியவந்தது. அதன் பேரில் 3 பேரையும் சிபிஐ போலீசார் விசாரணைக்கு அழைத்து பிறகு கைது செய்து நேற்று கோபி சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில் அதிமுக பிரமுகர் அருளானந்தம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அருள் ஆனந்தத்துடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை சி.பி.ஐ சேகரித்தனர். விசாரணையில் இந்த வழக்கில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அவர்கள் 3 பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் பெயர் விபரங்கள் குறித்த எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை. தொடர்ந்து  சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். விசாரணையின் முடிவில் அவர்கள் கைதாக வாய்ப்பு இருப்பதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. மேலும் 3 பேர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதால் இந்த வழக்கு மீண்டும் பரபரப்பை எட்டியுள்ளது. அவர்களும் அரசியல் பிரமுகர்களா?  இல்லை தனி நபர்களா? என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.

-சீனி, போத்தனூர்.

Comments