400 ஆண்டு பழமையான நகரத்தார் காவடி சிங்கம்புணரியைக் கடந்தது!


-MMH

தைப்பூச விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பகுதியிலிருந்து நாட்டுக்கோட்டை நகரத்தார், 'நாட்டார்கள் காவடி' எடுத்து பாதயாத்திரையாக பழநிக்கு செல்வது வழக்கம். நகரத்தார்கள் 400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் காவடி பயணம் மேற்கொள்கின்றனர்.

சர்க்கரை காவடி, விபூதி காவடி, மயில் காவடி என 200க்கும் மேற்பட்ட காவடிகள் எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனாவின் காரணமாக 3 பாரம்பரிய குடும்பங்களின் சார்பாக 

வேல்காவடி, மயில்காவடி, பச்சைகாவடி என 3 காவடிகள் மட்டுமே எடுத்துச் செல்கின்றனர். காவடிக்கு முன்பு கூண்டு கட்டப்பட்ட மாட்டு வண்டியில் ரத்தினவேல் சென்றது. 



பாரம்பரிய முறைப்படி ஊர்வலத்திற்கு முன்பாக ஒருவர் கொம்பு ஊதிக்கொண்டு சென்றார். ஒவ்வொரு நாள் இரவில் நடக்கும் பூஜையின்போது ரத்தினவேலுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பாதயாத்திரையாக செல்லும் நகரத்தார், திரும்பி வரும்போதும் பாத யாத்திரையாக வருகின்றனர். 

21 நாள் யாத்திரையாக வரும் இந்த நகரத்தார்கள் குன்றக்குடி, சிங்கம்புணரி, மணப்பச்சேரி, நத்தம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக 7 நாட்கள் பயணமாக பழனியை சென்றடைகிறார்கள்.

அதன்பின் பழனிமலை ஏறி, காவடிகளை பழனி முருகனுக்கு செலுத்தியபின் மீண்டும் நடந்தே வீடு திரும்புவது இவர்களின் தனிச்சிறப்பாகும். சிங்கம்புணரி வணி,


கர்கள் மற்றும் நாட்டார்கள் சார்பில் காவடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

-அப்துல் சலாம், திருப்பத்தூர்.

Comments