கடும் மனஉளைச்சல்.. லோன் வாங்கி கட்ட முடியாமல்... கதறி உயிரைவிட்ட ஊழியர்.. சென்னையில் ஷாக்!

     -MMH

     சென்னை: சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் கடன் நெருக்கடியால் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் வங்கி கொடுத்த நெருக்கடியால் தற்கொலை என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கிரெடிட் கார்டு மற்றும் பர்சனல் லோன் மூலம் ரூ.6 லட்சம் வாங்கிய நிலையில் வங்கி ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சென்னை பெரவலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஜவஹர் நகர் முதல் சர்குலர் சாலையில் வசித்து வந்தவர் வசந்தகுமார் வயது 59. இவரது மனைவி சுவேதா. இவர்களுக்கு ஒரு மகன் மகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். வசந்தகுமார் அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். வசந்தகுமார் இரண்டு வங்கிகளில் கிரெடிட் கார்டு மற்றும் மேலும் ஒரு வங்கியில் பர்சனல் லோன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையில்லாமல் பணக்கஷ்டத்தில் இருந்ததால் வசந்தகுமார் தவணையை சரியாக கட்டவில்லை. வங்கிகளால் நியமிக்கப்பட்ட ஏஜென்டுகள் தொடர்ந்து வசந்தகுமாரிடம் பணம் கேட்டு தொல்லை செய்து வந்தார்களாம்.

இதனால் மனவேதனை அடைந்த வசந்தகுமார் நேற்று இரவு வீட்டின் சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை பெரவள்ளூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ருக்மாங்கதன், சென்னை.

Comments