திருடவந்த இடத்தில் செருப்பை விட்டு தலைதெறித்து ஓடிய திருடன்..!!

     -MMH

     கோவை மாவட்டம் போத்தனூர் சாரதா மில் ரோடு இரயில்வே கோட்ரஸ்  பகுதியில் திருட்டு சம்பவம்.

போத்தனூர் பிரதான பகுதியான சாரதா மில் சாலை இங்கு உள்ள இரயில்வே கோட்ரஸ் பகுதியில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஓய்வு பெற்ற ஊழியர்கள் நிறைய வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் நேற்று மாலை மூன்று மணி அளவில் ஒரு சிறுவன் அலறல் சத்தம் கேட்டது அக்கம் பக்கத்தினர் கூடினர். சிறுவனை விசாரிக்கையில் வட மாநில திருடன் ஒருவன் தங்கள் வீட்டிற்க்கு திருட வந்தான் நான் சத்தம் போட்டதும் என்ன செய்வது என்று தெரியாமல் ஓடி விட்டான் அதனால் நான் சத்தம் போட்டேன் என்றார் அந்த சிறுவன்.

மிகவும் அமைதியான அப்பகுதியில் இச்சபம்வம் அரங்கேறி உள்ளது அப்பகுதி மக்களை அச்சமடைய செய்கிறது. திருட வந்த இடத்தில் பயந்து அவன் தன் ஒரு ஜோடி செருப்பையும் விட்டு தெறித்து ஓடியது வடிவேல் காமெடி போல் ஆகி விட்டது.

ஓடிய திருடன் எங்கு சென்றான் என்று தெரியவில்லை. சிறுவன் சத்தம் போடாமல் இருந்தால் திருட்டு சம்பவம் அரங்கேறியிருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. சுதாரித்த சிறுவனுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வடமாநில இளைஞர்கள் அதிகம் இச்சபவத்தில் ஈடுபடுகின்றனர். காவல்துறை அனைவரையும் கண்காணித்து பிடித்து வருகிறது.

விரைவில் செருப்பை விட்டு தெறித்து ஓடிய திருடனையும் முனைப்புடன் பிடித்து சரியான மாவுகட்டு வைத்தியம் கொடுகப்படும் என போத்தனுர்  மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு வைக்கப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பீர் முகமது, குறிச்சி.

Comments