மலைவாழ் மக்களுக்கு எப்போது பேருந்து..??

     -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை டாப்ஸ்லிப் பச்சை பசேல் என்று அழகில் கண்ணை கவரும் பகுதியான இங்கு, மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

கடந்த 6 மாதத்திற்கு மேலாக இங்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைப்பட்டு உள்ளது. மருத்துவம் மற்றும் அவரசர சிகிச்சை மற்றும் விதவை பென்ஷன், முதியோர் ஊக்கத்தொகை பெற, காய்கறிகள் வாங்க ஆனைமலை வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாடகைக்கு ஆட்டோ பிடித்துக்கொண்டு அல்லது நடந்தே வரவேண்டிய சூழல் உள்ளதாகவும் மலைவாழ் பழங்குடியின மக்கள் வேதனை அடைகின்றனர்.

மழைவாழ் மக்கள் சங்க கோவை மாவட்ட தலைவர் பரமசிவம் சார்பில் போக்குவரத்து கழகம் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பேருந்து சேவை தொடங்கப்பட்ட பிறகும் இந்த வழித்தடத்தில் பேருந்து சேவை தொடராமல் இருப்பது மலைவாழ் மக்களுக்கு சிரமமாக உள்ளது. விரைவில் பேருந்து சேவை வழங்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,

பொள்ளாச்சி கிழக்கு.

Comments